shadow

நடிகர் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம் எது தெரியுமா?

மெர்சல் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ என்ற படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் 80% படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் தீபாவளிக்கு ‘தளபதி 62’ படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த வீடியோ கேம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, படிப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் ‘Flight Simulator’ என்ற வீடியோ கேமை விஜய் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply