தமிழ் சினிமாவின் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கன்னையா காலமானார். அவருக்கு வயது 76. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின், அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் திடீர் கன்னையா. சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மூச்சு திணறல் காரணமாக கடந்த இரு வாரங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் (நவ., 17ம் தேதி) அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

மறைந்த கண்ணையாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். கன்னையாவின் உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (18ம் தேதி) அயனாவரத்தில் உள்ள மயானத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *