shadow

8பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் மகன் ஜேடன் பிரபல நடிகை ஒருவருடன் சர்ச்சைக்குரிய வகையில்இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வில்ஸ்மித்தின் மகள் வில்லோஸ்மித் பிரபல நடிகர் ஒருவருடன் இருந்த புகைப்படம் வெளிவந்த நிலையில் தற்போது மகனின் சர்ச்சைக்குரிய புகைப்படமும் வெளியாகி உள்ளதால் வில்ஸ்மித் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 மகன் மற்றும் மகள் இருவருமே இந்த சிறிய வயதில் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஈடுபட்டு வருவதால் வில்ஸ்மித் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆயினும் தங்கள் வாரிசுகள் எந்த தவறான பாதையையும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பதில் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாக வில்ஸ்மித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் வில்ஸ்மித் மற்றும் அவரது மகன் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஆப்டர் எர்த் என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் வில்ஸ்மித்தின் அடுத்த படமான விண்டர் டேல் என்ற திரைப்படத்தை பிரபலமாக்குவதற்காக வில்ஸ்மித் இதுபோன்ற பரபரப்பான செய்திகளை பரப்பிவிடுவதாக ஹால்வுட் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

 

Leave a Reply