எங்கள் நாடு என்ன குப்பைத்தொட்டியா? நடிகர் சதீஷ் காட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தற்போது அரசியல் கட்சிகளும் திரையுலகினர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே ரஜினி, கமல், சரத்குகுமார், ஜிவி பிரகாஷ், ஆரி, ஆதி உள்பட பலர் குரல் கொடுத்துள்ள நிலையில் தற்போது காமெடி நடிகர் சதீஷும் தனது டுவிட்டரில் காட்டமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர் ஆஸ்ரேலியாவில் இருந்து தாதுப்பொருளை, தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமாக மாற்றி, அரசுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போரது தான் #ஸ்டெல்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா..? ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு சதீஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *