shadow

தமிழ் திரையுலகில் கதாநாயகன் வில்லன் உள்பட பல படங்களில் சிறப்பாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரசன்னா

பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பிரசன்னா அதன் பின்னரும் அஞ்சாதே உள்பட ஒருசில படங்களில் வில்லனாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது அவர் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் 2 உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது