நடிகை தேவயானியின் சகோதரர் நகுலுக்கு நிச்சயதார்த்தம்.
nagul3
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் நடிகை நகுல். இவர் பிரபல நடிகை தேவயானியின் உடன்பிறந்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘பாய்ஸ்’ படத்தில் நகுலின் நடிப்பு ஓரளவுக்கு பேசப்பட்டாலும் அதன்பின்னர் ஒருசில ஆண்டுகள் நகுலுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன்பின்னர் உடல் எடையை குறித்து ஸ்லிம்மாக மாறினார். அதன்பின்னர்  நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ என்றா படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான விளம்பரத்தால் ஹிட் ஆனது.

பின்னர் நகுல், ‘மாசிலாமணி’, ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது நகுல் அமளிதுமளி, நாரதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நகுலுக்கும் ஸ்ருதி பாஸ்கர் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு தங்கள் திருமணத்தை நிச்சயித்துள்ளனர்.

இந்தச் செய்தியை நகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அவருடைய திருமண அறிவிப்பு வந்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *