shadow

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பிரபல நடிகரின் வேண்டுகோள்

சபரிமலை சீசன் தற்போது ஆரம்பமாகி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை வழிபட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்களும் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென, நடிகர் ஜெயராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ‘சபரிமலைக்கு தரிசனத்திற்காக வரும் கோடிக்கணக்கான பக்தர்களால் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பொன்னம்பலமேடு பகுதி மற்றும் வன விலங்குகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஜெயராமின் கோரிக்கைக்கு பின்னர் சபரிமலை பக்தர்கள் பெரும்பாலானோர் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *