அஜித், விஜய், சூர்யா படங்களில் நடித்த நடிகர் பாலாசிங் காலமானார்:

அஜித் நடித்த தீனா, ராசி, விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’, சூர்யா நடித்த ‘என்.ஜி.கே, கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்த பிரபல நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67

இன்று காலை 10மணிக்கு மேல் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையம் அருகே உள்ள பாலாசிங் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அதன்பின்னர் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள திரைப்பட மற்றும் நாடக நடிகரான பாலாசிங் மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply