நடிகர் அர்ஜூன் கதை திரைக்கதை எழுதி நடிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தை அவரது இரண்டு மகள்களும் சேர்ந்து தயாரித்து வருகின்றனர்.

அர்ஜூனுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் ஐஸ்வர்யா. இவர் விஷாலுடன் பட்டத்து யானை என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக ஓடாததால் வேறு வாய்ப்பு இன்றி வீட்டில் சும்மாதான் இருக்கிறார். இன்னொரு மகள் அஞ்சனா. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது அர்ஜூன் நடித்து இயக்கிக்கொண்டிருக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தை தயாரிக்கின்றனர்.

இவர்கள் தயாரிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக சிம்ரன் கபூர் என்ற மும்பை மாடல் அழகி அறிமுகம் ஆகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் இந்த படம் தயாராகி வருகிறது. தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற கருத்தை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது என்றும் இந்த படம் மாணவர்களையும், இளைஞர்களையும் பெரிதும் கவரும் என்றும் தயாரிபாளர்கள் ஐஸ்வர்யா, மற்றும் அஞ்சனா தெரிவித்தனர்.

Leave a Reply