shadow

Hate-Story-2-Pictureஇயக்குனர் வசந்த்தின் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த சுர்வீன் சாவ்லா என்ற நடிகை பாலிவுட்டில் உள்ள ஒரு படத்தில் நிர்வாணமாகவும், பாலியல் காட்சிகளிலும் நடித்துள்ளதால் அவருக்கு எதிராக மகளிர் அமைப்புகள் போர்க்கொடி எழுப்பியுள்ளன. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கையை மும்பையில் உள்ள மகளிர் அமைப்பு ஒன்று விடுத்துள்ளது.

பாலிவுட்டில் ஹேட் ஸ்டோரி 2 என்ற திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. ஹேட் ஸ்டோரி என்ற படத்தி தொடர்ச்சியான இந்த படத்தில் சுர்வீன் சாவ்லா, சுஷாந்த் சிங், ஜெய் பனுஷாலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை விஷால் பாண்டியா என்பவர் இயக்கியுள்ளர். சுமார் ரூ.60 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அடம், வரும் ஜூலை 18ஆம் தேதி இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் கதாநாயகி சுர்வீன் சாவ்லா, நிர்வாண காட்சிகளிலும், உடலுறவு காட்சிகளிலும் அப்பட்டமாக நடித்திருப்பதால், மகளிர் அமைப்புகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இயக்குனர் விஷால் பாண்டியாவுக்கும், நாயகி சுர்வீன் சாவ்லாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ள மகளிர் அமைப்புகள், இந்த படத்தை தடை செய்யவேண்டும் என்றும், சுர்வீன் சாவ்லாஉள்பட படத்தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுர்வீன் சாவ்லா, ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து, இயக்கிவரும் ஜெய்ஹிந்த் 2 திரைப்படத்தில் அவருக்கு காதலியாக நடித்து வருவதால், அர்ஜூன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1mrPFov” standard=”//www.youtube.com/v/1JY8rA7fVnU?fs=1″ vars=”ytid=1JY8rA7fVnU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5753″ /]

Leave a Reply