சசிகுமார் படத்தின் வில்லனாகும் அர்ஜூன்

ஆக்சன் கிங் அர்ஜூன் ஏற்கனவே அஜித்தின் ‘மங்காத்தா’ மற்றும் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் சசிகுமாரின் அடுத்த படமான ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ பட இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவுள்ளார். சசிகுமாரின் சொந்த நிறுவனமான ‘கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

முத்தையாவின் முந்தைய படங்கள் போலவே இந்த படமும் கிராமத்து அதிரடி ஆக்சன் படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் கதை சூர்யாவுக்காக எழுதியதாகவும், ஆனால் எதிர்பாராத காரணத்தால் சூர்யா நடிக்க முடியாததால் சசிகுமார் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *