ஜூன் 17-ல் ‘அச்சம் என்பது மடமையடா’  இசை வெளியீடு
acham
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சிம்புவின் அடுத்த படமான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீடு வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் எவ்வித விழாவும் இன்றி ஆன்லைனிலேயே இந்த படத்தின் பாடல்களை வெளியிட இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்காக ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இந்த படத்தின் டிராக்லிஸ்ட் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் தாமரை எழுதியுள்ளார் என்பதும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பதும் இந்த பட ஆல்பத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ‘அச்சம் என்பது மடமையடா’  படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மஞ்சிமாமோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *