‘அச்சம் என்பது மடமையடா’ சென்சார் தகவல்கள் இதோ

aymசிம்பு நடித்து முடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனால் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் வாய்ப்பை இந்த படம் இழந்துள்ளது.

இருப்பினும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கவுதம் மேனன் தயாரித்து இயக்கியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *