shadow

ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு டுவிட்டரில் தகவல் கூறிய மார்க்

பேஸ்புக்கில் ஏற்பட்ட தடங்கல் சரிசெய்யப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூக்கர்பெர்க் டுவிட்டரில் தகவல் வெளியிட்டார்.

சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்று ஃபேஸ்புக். வங்கியில் அக்கவுண்ட் இருக்கோ இல்லையோ ஆனால், அனைவருக்கும் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இருக்கும். பலரது வாழ்க்கை ஆரம்பிப்பதும் ஃபேஸ்புக்கில் தான். இப்படிப்பட்ட ஃபேஸ்புக் கொஞ்ச நேரம் நிலை தடுமாறியது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நேற்று சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் நுழைய முடியாமல் தவித்தனர். அதன் காரணமாக சிலருக்கு ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து விரைவில் சரி செய்யப்படும் என்ற தகவல் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூக்கர்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் இணையதளம் சிறு தடங்களில் உள்ளது. இன்ஜினியர்கள் சரி செய்யும் முயற்சியில் உள்ளனர். விரைவில் ஃபேஸ்புக் சேவை தொடரும் என்று செய்தி வெளியிட்டிருந்தார். இதையடுத்து ஃபேஸ்புக் சரிசெய்யப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டது.

Leave a Reply