shadow

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக புதிய சங்கம். விஷால் அதிர்ச்சி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று அதன் தலைவராக நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் விஷாலின் வேலைநிறுத்த முயற்சிக்கு திரைப்பட விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைக்க மறுத்துவிட்டது

இதனால் விஷாலுக்கு பின்னடைவு என்று கூறப்படும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு அதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த புதிய அமைப்பிற்கு தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, அன்பு செழியன், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், செயலாளர் ராஜமன்னார், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்’ என்று கூறியுள்ளார்.

இந்த புதிய அமைப்பின் தோற்றத்தால் விஷால் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply