shadow

பிரதமர் மோடியிடம் அப்துல் கலாமின் முத்த சகோதரர் விடுத்த முக்கிய வேண்டுகோள்

modiமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உடல் நேற்று லட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பின்னர் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்பட மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாமின் உடல் கொண்டு வரப்பட்டபோதும், அடக்கம் செய்யும்போதும் திரண்டிருந்த பொது மக்கள் “வந்தே மாதரம்’, “ஜெய்ஹிந்த்’, “பாரத் மாதா கி ஜெய்’ என்று விண்ணதிர முழக்கம் இட்டனர்.

இந்நிலையில்அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியிடம், கலாமின் மூத்த சகோதரர்  முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் முக்கியமான ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினந்தோறும் சில நிமிடங்கள் திருக்குர்ஆன் ஓத ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அந்த இடத்தை புனிதமான இடமாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் மரைக்காயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி,  அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதியாக செய்வதாக உறுதியளித்தார். மரைக்காயர் தமிழில் விடுத்த இந்த வேண்டுகோளை பிரதமர் மோடியிடம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.சேதுராமன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply