shadow

ajithசமீபத்தில் புறம்போக்கு’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஆர்யா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுவிட்டரில் இணைந்தார். டுவிட்டரில் இணைந்த அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் குவிந்து வருகிறது. டுவிட்டரில் தனக்கு கிடைத்த வரவேற்புக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்ட நடிகர் ஆர்யா, சமீபத்தில் டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் சேட்டிங் செய்தார்.

அப்போது அவரிடம் ஒரு ரசிகர்கள் ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்த உங்களுக்கு அஜீத்தை பற்றி நிறைய தெரிந்திருக்கும். அஜீத்துக்கு பிடிக்காதவர்கள் யார் யார்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த ஆர்யா, “வேலையில் கவனம் இல்லாமல் சோம்பேறியாக இருப்பவர்களை அஜீத்துக்கு சுத்தமாக பிடிக்காது’ என்று கூறினார். மேலும் அஜீத் ஒரு சிறந்த மனிதர் மட்டுமின்றி தன்னம்பிக்கைக்கு எடுத்து காட்டாக வாழ்ந்து வருபவர் என்றும் ஆர்யா கூறினார்.

ஆர்யா தற்போது வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க, இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக், ஜீரோ சைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply