aaryaசிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கிரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க. இந்த படத்தில் ஆர்யா, சந்தானம்,தமன்னா, பானு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

முழுக்க முழுக்க காமெடி திரைக்கதையை கொண்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு உண்ணாவிரத காட்சி படமாக்கப்பட்டது.

அற்ப காரணங்களுக்காக காதலிகள் தங்கள் காதலர்களை கழட்டிவிட்டுவிட்டு, வேறொரு காதலர்களை பிடித்துக்கொள்ளும் பெண்களை கண்டித்து ஆர்யாவும், சந்தானமும் உண்ணாவிரதம் இருப்பதாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

உண்ணாவிரத பந்தல் அருகே சாப்பாடு, பிரியாணி, சிக்கன், மற்றும் வாழைப்பழங்கள், கூல்டிரிங்ஸ் ஆகியவை வைக்கப்பட்டு அதன் அருகில் உள்ள பந்தலில் உண்ணாவிரதம் இருப்பது போன்றதுதான் அந்த காட்சி.

படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பலர் இந்த காட்சி படமாக்கப்படும்போது விழுந்து விழுந்து சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *