சிறுமி ஆருஷியை கொன்ற வழக்கில் சிறுமியின் பெற்றோரான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரே குற்றவாளிகள் என்று காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு விசாரணை காஷியாபத் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நொய்டாவை சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாரின் 14 வயதுடைய மகள் ஆருஷி கடந்த 2008ஆம் ஆண்டு தனது படுக்கை அறையில் இறந்து கிடந்தார். அதன் மறுநாள் வீட்டு வேலைக்காரர் ஹேவ்ராஜ் என்பவரின் உடல் மாடியில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆருஷியின் தந்தை, தாய் இருவரும்  கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் சிறுமி ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜ் ஆகியோரை தல்வார் தம்பதியரே கொலை செய்தனர் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து தல்வார் தம்பதிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்டப் பின் இவர்களுக்கான தண்டனை விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது. தல்வார் தம்பதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லால் உத்தரவிட்டார்.

Leave a Reply