shadow

 

aarthyஅதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரக்களத்தில் குதித்திருக்கும் நட்சத்திரங்கள் ராமராஜன், விந்தியா,செந்தில், மனோபாலா, பொன்னம்பலம், சிங்கமுத்து வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி.

சன் டிவி ,மற்றும் கலைஞர் டிவிகளில் நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தவர் திடீரென ஏன் அதிமுகவில் சேர்ந்தார். இதோ அவர் கொடுத்த பேட்டியின் சில பகுதிகள்:”

சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த நீங்கள் திடீரென அம்மாவிடம் சரண் அடைந்தது ஏன்?

” சன் டிவி-யிலேயும் கலைஞர் தொலைக்காட்சியிலேயும் சில நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டவதான் நான். கலைஞர் டி.வி-யில ‘தீராத விளையாட்டு’ங்கிற  என் நிகழ்ச்சி ஆடியன்ஸ்கிட்ட நல்ல ரீச்ல இருந்தப்போ, ‘உங்க நிகழ்ச்சியால எங்களுக்கு நஷ்டம்தான்’னு சொல்லி, அவங்களாதான் என்னை வெளியே அனுப்பினாங்க. ஆனா, இந்தக் காரணத்துக்காக நான் அ.தி.மு.க-வில் சேரலை.” எனக்கு அம்மாவை உண்மையிலேயே பிடிக்கும். அவங்க நிர்வாகத்திறன் வேற யாருக்கும் வராது.

அரசியலுக்கு வந்ததால் வடிவேலு படும் கஷ்டத்தை பார்த்தும் எப்படி தைரியமா வர்றிங்க?

வடிவேலு அரசியலுக்கு வந்ததால்தான் வாய்ப்பு பெறவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஒன்றும் முழு நேர அரசியல்வாதி இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யப்போகிறேன். மற்றபடி சினிமா தான் எனக்கு எல்லாம். சினிமாவில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது.

நீங்கள் அதிமுகவில் சேர்ந்தது குறித்து உங்கள் கணவர் என்ன சொன்னார்?

அவருக்கு நான் அதிமுகவில் சேர்ந்ததே தெரியாது. பேப்பரை பார்த்துதான் என்னிடம் கேட்டார். ஆமாம் என்று சொன்னேன். வாழ்த்து கூறினார்.

Leave a Reply