அருள்நிதியின் ஆறாது சினம்’ படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட்
aaradhu sinam
கடந்த வருடம் ‘டிமாண்டி காலனி’, நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என இரண்டு படங்களில் நடித்த நடிகர் அருள்நிதி தற்போது ‘ஆறாது சினம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் தரப்பில் உருவான ‘ஈரம்’ படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் ‘ஆறாது சினம்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் அனைத்தும் முடிந்து நேற்று இந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் இந்த படத்தை பார்த்த் சென்சார் அதிகாரிகள் ‘UA’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இந்த படம் சென்சாரில் ‘யூ’ சர்டிபிகேட்டை பெறாததால் வரிவிலக்கு சலுகையை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆறாது சினம்’ படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் பிப்ரவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எஸ்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கிய ‘மெமொரீஸ்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் ‘ஆறாது சினம்’ என்பது ஏற்கனவே நாம் அறிந்ததுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *