shadow

kejriwalசமீபத்தில் ஆம் ஆத்மி மேலிட தலைவர்களுக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பதவியின் கடினமான வேலைப்பளு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டாலும், அவருக்கும் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் பூஷனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த ராஜினாமாவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

கடந்த முறை டெல்லி  முதல்வராக பதவியேற்ற 45 ஆவது  நாளில் முதல்வர் பதவியை  ராஜினாமா செய்த  கெஜ்ரிவால், இந்த முறை முதல்வராக பதவியேற்ற சுமார் 20 நாட்களுக்குள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த கெஜ்ரிவால், ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகளைக்  கவனிக்க முடியவில்லை. நான் டெல்லி மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறேன். எனவேதான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் புதிய ஒருங்கிணைப்பாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை இதுகுறித்து விரைவில் கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

கடந்த முறை முதல்வர் பதவியேற்றவுடன் 40 நாளில் தனது முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இம்முறையும் கட்சியின் பதவியை அவர்  முதல்வராக பதவியேற்று 20 நாட்களில் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply