shadow

aam aadhmiகடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால், பதவியேற்ற பின்னர் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகியதை அடுத்து தற்போது இன்னொரு உறுப்பினர் பெண் தொண்டர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான குமார் விஸ்வாஸ் மீது ஆம் ஆத்மி பெண் தொண்டர் ஒருவர், டில்லி பெண்கள் ஆணையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகாரில் குமார் விஸ்வாஸ் தன்னுடன் சட்டவிரோதமாக உறவு வைத்திருந்தார் என்றும், தற்போது தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பிரதிகள் டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களுக்கும் அனுப்பியுள்ள அந்த பெண், தனக்கு நீதி வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்.

இந்த புகாரை விசாரித்து வரும் டில்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரான பர்கா சுக்லாசிங் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு குமார் விஸ்வாசுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து குமார் விஸ்வாஸ் கூறுகையில், “ஆம் ஆத்மி பெண் தொண்டர், எனக்கு எதிராக தெரிவித்துள்ள புகார் பொய்யானது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சிலர் இவ்வாறு செய்துள்ளனர். எனக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்த பெண், சில நாட்களுக்கு முன், டில்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் கூறுவது பொய்யான புகார் என்று அப்போதே நிரூபிக்கப்பட்டுவிட்டது’ என்றார்.

Leave a Reply