shadow

‘ஆண்டவன் கட்டளை’க்கு அனுமதி கிடைச்சாச்சு

andavan-kattalaiவிஜய்சேதுபதி நடித்த படங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒன்று வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்த அடுத்த படமான ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தணிக்கை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். விஜய்சேதுபதியின் முந்தைய படமான ‘தர்மதுரை’ படமும் யூ சர்டிபிகேட் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, ரித்திகாசிங், பூஜா தேவரியா, நாசர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியுள்ளார். கே இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் தயாரித்துள்ளார்.

Leave a Reply