கட்சி ஆரம்பித்த ஓரே வருடத்தில் டெல்லியில் ஆட்சியை பிடித்து சாதனை புரிந்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் இன்று காலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் திறக்கப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்தின் திறப்புவிழாவிற்கு வருகை தந்தனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொருளாளர் டாக்டர் ஆனந்த் கணேஷ் நிருபர்களிடம் கூறியபோது, “ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவலாக ஆதரவு பெருகி வருகிறது. அதுவும் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் 33ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் கட்சியில் சேருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆம் ஆத்மி பேஸ்புக் கணக்கின் மூலமும், இணையதளம் மூலம் கட்சியில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஊழலை ஒழிக்கும் எண்ணம் உள்ளவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் என யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் சேரலாம்.
பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பமும் பெறப்படுகிறது. கட்சியில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு வசதியாக கட்சியின் தலைமை அலுவலகம் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு டாக்டர் கணேஷ் கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *