e0ae8fe0ae95e0aeb2e0af88e0aeb5e0aea9e0af8d

ஏகலைவன் என்பவன் வேடர் இனத்தைச் சேர்ந்தவன். வித்தையில் ஆர்வமுள்ள இவன் துரோணரிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்று மன்னர்களுரிய சகல வித்தைகளையும் கற்றுத் தர வேண்டுகிறான். “”க்ஷத்தியர்களுக்குரிய வித்தையை வேடனான உனக்கு கற்றுத் தரமாட்டேன், என மறுத்து விட்டார் துரோணர். வேடனுக்கு தேவை விலங்குகளை வேட்டையாடும் அம்பெய்யும் கலை தான். மற்றவை எதற்கு என்பது துரோணரின் வாதம். ஏகலைவனுக்கு மிக்க வருத்தம். ஆனாலும், முயற்சியுடையவன் எதிலும் வெற்றி பெற்றே தீருவான். தன்னை துரோணர் ஜாதி துவேஷம் காட்டி ஒதுக்கி விட்டாரே என அவன் அவர் மீது கோபப்படவில்லை.

மரங்களுக்கு தீ வைக்கவில்லை. அவரது ஜாதிக்காரர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவன் துரோணரைப் போலவே ஒரு மெழுகு சிலை செய்தான். அந்த சிலையை உயிருள்ள துரோணராகக் கருதி, அவரைத் தன் மானசீக குருவாக ஏற்று, துரோணர் அவரது சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அத்தனை வித்தையையும் கற்றுத் தேறி விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. ஏகலைவனை மறந்தே போய் விட்டார். துரோணரின் முகமும் இவனுக்கு மறந்து விட்டது. ஒருநாள் நாய் ஒன்று வாயைத் திறக்க முடியாமல் அங்கே வந்து நின்றது. அதன் வாயில் அம்புத்தையல் போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அர்ஜூனன் ஆச்சரியப்பட்டு, “”குருவே! தாங்கள் இப்படி ஒரு அற்புத வித்தையை கற்றுத்தரவே இல்லையே. இது நேர்த்தியான ஒன்றாக உள்ளதே, என்றான்.

writter-3(1)

துரோணருக்கும் ஆச்சரியம். தனக்கு மட்டுமே தெரிந்த இந்தக்கலையை தெரிந்து கொண்டவன் யார்? என்ற ஆச்சரியத்துடன் நாயின் பின்னால் சென்றார். அங்கே ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருந்தான். “” நீ யார்? இந்த அற்புதமான கலைகளையெல்லாம் உனக்கு சொல்லித் தந்தது யார்?  என்றார். அவன் மெழுகு பொம்மையைச் சுட்டிக்காட்டினான். தன் இளவயது உருவத்தை அப்படியே வடித்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், “”நான் தான் இந்த துரோணர், என்றதும். அவன் காலில் விழுந்தான்.

தாங்கள் எனக்கு அனுமதி மறுத்ததால், தங்களை மானசீக குருவாக ஏற்று நானாகவே படித்தேன், என்றான். இவனிடம் இக்கலை இருந்தால் சரிப்பட்டு வராது எனக் கருதினார் துரோணர். “”மாணவனே! அப்படியானால் நீ குரு காணிக்கை தர வேண்டாமா? என்றார். அவன் என்ன வேண்டும் என்றான். “”உன் கட்டை விரலைக் கொடு என்றார். மாணவன் மறுக்கவில்லை. கட்டைவிரலை வெட்டிக் கொடுத்து விட்டான். துரோணர் இப்படிச் செய்ததைத் தான் தவறென சிலர் வாதிடுவர். வில்வித்தை பயின்ற இவன் ஒரு நாயையே இந்தப் பாடு படுத்துகிறான் என்றால், மனிதர்களை இந்த விதை கொண்டு என்னபாடு படுத்துவான். அதனால் தான் கட்டை விரலை வாங்கி விட்டார் துரோணாச்சாரியார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *