shadow

aadi amavasaiஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று சென்னை மெரினா பீச்சில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தி, ‘திதி’ கொடுத்தனர்.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினத்தில் நல்ல காரியங்கள் செய்ய உகந்த நாளாக கருதப்பட்டு வருகிறது.. இந்த வகையில் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆடி அமாவாசை சிறந்த நாள் என்று அனைவராலும்  நம்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த வருடத்தின் ஆடி அமாவாசை நேற்று வந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய தலங்கள், நீர்நிலைகள், ஆறுகள், மற்றும் கடற்கரை ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதேபோல் சென்னை மெரினா பீச்சில் நேற்று ஆயிரக்கணக்கானோர் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து  மறைந்த முன்னோர்களுக்கு ‘திதி’ கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒரே நேரத்தில் ஏராளமானோர், சென்னை மெரினா பீச்சில் நேற்று காலை முதல் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் குவிந்தனர். விவேகானந்தர் சிலைக்கு எதிர்புறம் கடற்கரையை யொட்டிய மணல் பகுதியில்,ஏராளமானோர் திதி கொடுத்தனர். நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸார் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை மெரினா கடற்கரை தவிர மேற்கு மாம்பலத்தில் உள்ள கோ-சாலையிலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து திதி கொடுக்கும் நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோ சாலையில் பித்ரு தர்ப்பணம் செய்துகொண்டார்.

Leave a Reply