shadow

manoramaபழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா சற்று முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

ஐந்து தலைமுறை நடிகர்களுடன் 1000 படங்களுக்கும் மேல் நடித்து உலக சாதனை செய்த மனோரமா, கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஆச்சி மனோரமாவின் மறைவால் கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply