சுஷ்மா சுவராஜூக்கு சிறுநீரக தானம் கொடுக்க முன்வந்த இளைஞர்

sushmaமத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு சிறுநீரக குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நிரந்தர தீர்வு ஏற்பட மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய எய்ஸ் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் சுஷ்பா பி பாசிட்டிவ் ரத்த வகையை கொண்டவர். ஆனால் அவருடைய குடும்பத்தினர் யாருக்கும் ‘பி’ பாசிட்டிவ் ரத்தவகை இல்லாததால் வெளியாரிடம் இருந்துதான் சிறுநீரகம் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுஷ்மா சுவராஜூக்கு யார் சிறுநீரகம் கொடுக்க போகின்றார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் ‘பி’ பாசிட்டிவ் ரத்தவகையை பெற்ற ஒருவர் சிறுநீரகம் தானம் தர தயார் என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் வர்மா என்ற அவர் டுவிட்டரில் ‘உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனது சிறுநீரகத்தை தானமாக தர தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரிடம் சிறுநீரக தானம் பெறப்படுமா? என்பது குறித்த தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *