shadow

இந்தியரை அடுத்து சீனர் மீது இனவெறி தாக்குதல். நியூயார்க்கில் பரபரப்பு

சமீபத்தில் இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்கர் ஒருவரின் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த சுவடு மறைவதற்குள் தற்போது சீனர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் வெளிநாட்டினர் வாழும் நாடு என்ற தகுதியை அமெரிக்கா இழந்து வருகிறது.

சீனாவை சேர்ந்த 68 வயது வாங் ஷென்ஸின் என்பவர் நியூயார்க்கில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் நியூயார்க்கில் நேற்று பேருந்து ஒன்றில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவருடன் ஒரு அமெரிக்க பெண்ணும் பயணம் செய்தாள். அவள் வாங் தலையில் தான் வைத்திருந்த குடையால் பலமாக அடித்தாள். மேலும் அவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் போது அவரை இடித்து கீழே தள்ளினாள்.

ஏன் இப்படி கொடூரமாக நடந்து கொள்கிறீர்கள் என்று அப்பெண்ணிடம் வாங் கேட்டற்கு அவர் எனக்கு சீனர்களை பிடிக்காது. அவர்களை வெறுக்கிறேன். நீங்கள் அமெரிக்காவை விட்டு உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள்’ என்று ஆவேசமாக கூறினார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வெகுவேகமாக பரவி வருகிறது.

Leave a Reply