shadow

திருமாவளவனுக்கு வாரண்ட்: மயிலாடுத்துறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் திருமாவளவன் மீதான வழக்கு ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் பல வருடங்களாக திருமாவளவன் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவர் மீது மயிலாடுதுறை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாயிலாடுதுறையில் பேரணி ஒன்றை நடத்தியது. ஏராளமான வி.சி.க தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த பேரணியில் திடீரென பிரச்சனை வெடித்து பேரணிக்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் தாக்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வி.சி.க தலைவர் திருமா உட்பட குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் நேரில் ஆஜராகுமாறு பலமுறை நீதிமன்றம்க்உத்தரவிடப்பட்டிருந்தும் பல வருடங்களாக நால்வரும் ஆஜராகாத காரணத்தினால் திருமாவளவன் உட்பட நான்கு பேரை கைது செய்ய மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம். பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது

Leave a Reply