shadow

ஜி.வி.பிரகாஷின் வெர்ஜின் தலைப்பு
15IN_LPN_GVP_2154998f
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் ‘வெர்ஜின் சாபம் சும்மா விடாது’ என்ற வசனம் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மட்டுமின்றி ஜி.வி.பிரகாஷின் அனைத்து படங்களுமே வித்தியாசமான தலைப்பை பெற்றுள்ளதால் அவருடைய படங்களுக்கு இளைஞர்களின் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அவர் நடிக்கும் படங்களுக்கு புரூஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கெட்ட பையண்டா இந்த கார்த்தி, கடவுள் இருக்குறான் குமாரு ஆகிய டைட்டில்கள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிபல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுக்கு சமூக ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply