இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பிரச்சனை நடைபெற்று வருவது தெரிந்ததே. அதன் உச்சகட்டமாக நேற்று முன் தினம் பெப்பர் ஸ்பிரே தெளித்ததும் தெரிந்ததே. ஆனால் துருக்கி நாடாளுமன்றத்திலும் நேற்று எம்.பிக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மோதிய சம்பவம் நடந்துள்ளது.

துருக்கி நாட்டில் நீதிபதிகள் நியமனத்தை சமீபத்தில் அரசு தனது கட்டுப்பாடிற்கு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனை செய்தனர். ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் அடிதடி மோதல் ஏற்பட்டது. இதில் எதிர்க்கட்ச் எம்.பி ஒருவரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. ஆளுங்கட்சி எம்.பி. ஒருவரின் கைவிரல் முறிந்தது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய குரு ஒருவரின் தலையீட்டின் பேரில் நீதிபதிகள் நியமனம் நடைபெற்று வருவதால் அதை தடுக்கவே துருக்கி அரசு நீதிபதிகள் நியமனத்தை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் அரசு தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. நீதிபதிகள் நியமன சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1g8Kvfb” standard=”//www.youtube.com/v/Q47MR1ZEFs0?fs=1″ vars=”ytid=Q47MR1ZEFs0&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2517″ /]

Leave a Reply