shadow

19சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த மோதல் காரணமாக பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர்.

பிரிசிடென்ஸி கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு ஆண்டுவிழாவும், இசை போட்டியும் நடக்க இருந்தது. இசை போட்டியில் மாணவர்கள் பாட்டு பாடிக்கொண்டும், மாணவிகள் நடனம் ஆடிக்கொண்டும் இருந்தனர். அந்த நேரத்தில் வெற்றி பெற்றவர்கள் யார் என்று அறிவித்ததில் பிரச்சனை ஏற்பட்டதால் இரு பிரிவினர்களுக்கிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும், கல்லால் எறிந்துகொண்டும் தாக்குதல் நடந்தது.

திருவல்லிக்கேணி உதவிக்கமிஷனர் கிரி தலைமையில் 200 போலீஸார் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து கலவரம் செய்த மாணவர்களை விரட்டியடித்தனர். கல் எறிதல் தாக்குதலில் ரமேஷ் மற்றும் ஞானசுந்தரம் ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply