விக்ரம் நடிக்கும் ரூ.300 கோடி படத்தின் பூஜை
சீயான் விக்ரம் நடிக்கும் மகாவீர் கர்ணன் என்ற படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. இந்த பூஜையை சபரிமலையில் ஒரு பிரபல குருக்கள் நடத்தி வைத்தார்.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம், கர்ணனாக நடிக்கவுள்ளார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் சுமார் 35 மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம் மற்றும் சாமி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

Leave a Reply