shadow

yennai arindhaalஅஜீத்தின் என்னை அறிந்தால், மற்றும் ஷங்கரின் ‘ஐ’  ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகவுள்ள நிலையில் இதில் எந்த படம் வெற்றி அடையும் என்பதில் அஜீத் மற்றும் ஷங்கர் ஆகிய ரசிகர்களிடையே டுவிட்டரில் பெரும் கருத்துப்போர் நடந்து வருகிறது.

‘ஐ’ படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு அர்னால்ட் உள்பட ஹாலிவுட் பிரபலங்களை வரவழைத்து கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தினை புரமோஷன் செய்துள்ளனர் என்றும் ஆனால் நாளை மறுநாள் ரிலீஸாகவுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் பாடல் வெளியீட்டுக்கு அதன் தயாரிப்பாளருக்கு ஒரு பைசாகூட செலவில்லாமல் தல ரசிகர்கள் உலகம் முழுவதும் படத்தை புரமோஷன் செய்துவிடுவார்கள் என்றும் டுவிட்டரில் கூறப்பட்டு வருகிறது.

ரூ.165 கோடி செலவு செய்து எடுக்கபட்டதாக கூறப்படும் ‘ஐ’ படம் ரூ.200 கோடி வசூல் செய்தால்தான் 25% லாபம் தரும். ஆனால் ரூ.80 கோடியில் தயாரான ‘என்னை அறிந்தால்’ படத்தின் வசூலை ஒரே வாரத்தில் ரூ.160 கோடி வசூல் செய்து, 100% லாபம் வரவழைத்து எங்கள் ‘தல’யின் மாஸ் என்ன என்பதை புரியவைப்போம் என அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் சூளுரைத்து வருகின்றனர்.

என்னை அறிந்தால் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே டிரெண்டில் கொண்டு வந்து கொண்டிருக்கும் அஜீத் ரசிகர்கள், ‘ஐ’ டிரைலரின் லைக் மற்றும் பார்வையாளர்களை விட அதிகம் வரவழைக்க இப்பொழுதே திட்டம் போட்டு வருகின்றனர்.

டுவிட்டரில் இந்த இரு படங்களுக்கும் இடையே நடந்து வரும் போரை விஜய் உள்பட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வேடிக்கை மட்டும் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply