shadow

14டீக்கடைக்காரராக இருந்து குஜராத் முதல்வராக மாறியிருக்கும் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானால், தமிழகத்திலுள்ள இந்து கோயில்களை குண்டு வைத்து தகர்ப்போம் என த.மு.க. என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நேற்று (15ஆம் தேதி) ஒரு மர்ம கடிதம் வந்தம். அதில் ”டீக்கடைக்காரர் மோடி பிரதமரானால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில், மேல்மருவத்தூர் கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோயில்களை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். இப்படிக்கு பிலால் மாலிக், த.மு.க.” என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த மர்ம கடிதம் வந்ததை அடுத்து கோயிலின் இணை ஆணையர் திருமகள், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மிரட்டல் கடிதம் எதிரொலியாக தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *