shadow

Sri Lankan presidentகடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே, பதவியை இழந்தவுடன் பல வழக்குகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மனைவி மீதும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டு அவர் நேரில் ஆஜராக இலங்கை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அதிபராக மஹிந்ஹா ராஜபக்சே இருந்த காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி  ராஜபக்சே, சிறிலிய சவிய என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆலோசகராக இருந்து வந்தார். இந்த நிறுவனத்தில் நிதி மோசடி செய்ததாக ஷிரந்தி  மீது தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெறவுள்ளதாகவும், இந்த விசாரணைக்காக ஷிரந்தி வரும் ஜூன் 1ஆம் தேதி ஆஜராகுமாறும் நிதிமோசடி  தடுப்பு பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இதனை ராஜபக்சே மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தாமும் தன்னுடைய தந்தை ராஜபக்சே ஆகிய இருவர் மட்டுமே அரசியலில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய தாயும், சகோதரர்களும் அதிலிருந்து விலகியே இருந்தனர் என்றும் ஆகவே அவர்களை பிரச்னைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply