பிரதமர் அலுவலகம் விளக்கம்

உலகமெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் உள்பட பல விவிஐபிக்களை கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் மனைவிக்கும் அவரது கார் டிரைவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக முன்னணி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது

ஆனால் இந்த செய்தி தவறானது என்றும் அப்படி ஒரு செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்றும் தங்களுடைய பத்திரிகையை தவறாக பயன்படுத்தி வதந்தியை வெளியிட்டு இருப்பதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது

மேலும் பாகிஸ்தான் பிரதமரின் மனைவிக்கும் அவரது டிரைவருக்கும் கொரோனா வந்ததாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் வதந்தி என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகமும் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply