vija-rahmanஇளையதளபதி விஜய் நடித்துள்ள ‘புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அடுத்த படம் ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ள ஜி.வி.பிரகாஷ், இதுவரை யாரும் செய்யாத புதுமை ஒன்றை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு பாடலை பாட அவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உறவினர்தான் ஜி.வி.பிரகாஷ் என்பதாலும், விஜய் படம் என்பதாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் ஒரு பாடலை பாட ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தி உண்மையானால், விஜய்க்காக அவர் பாடும் இரண்டாவது பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அழகிய தமிழ் மகன் படத்திற்காக ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கவுள்ள இந்த படத்தை அட்லி இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *