ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 100வது படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்?

rahmanஎஸ்.எஸ்.ராஜமவுலியில் ‘பாகுபலி 2’, ஷங்கரின் ‘2.0’ ஆகிய படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் அதாவது சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனத்தின் 100வது படமாக அமையவுள்ள இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு ஹீரோ நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அனேகமாக இளையதளபதி விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *