shadow

முதல்முறையாக நயன்தாரா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளின் படங்களுக்கு இசையமைத்துவிட்டபோதிலும் இன்னும் நயன்தாரா நடித்த ஒரு படத்திற்கு கூட இசையமைக்கவில்லை., இருப்பினும் முதல்முறையாக நயன்தாரா நடித்த படம் ஒன்றின் டீசரை அவர் ரிலீஸ் செய்யவுள்ளார்.

ஆம், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘அறம்’ படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் நாளை மாலை 5 மணிக்கு தனது டுவிட்டரில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் நயன்தாரா நடிக்கும் படம் ஒன்றிலும் அவர் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறி வழக்கு போட்ட மிஞ்சூர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, விக்னேஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Leave a Reply