விஜய் 62: படபிடிப்பு தொடங்கும் முன்பே பாடலை முடித்துவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

இளையதளபதி விஜய் நடிக்கும் ‘விஜய் 62’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் கழித்து ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விஜய்யின் அறிமுகப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், இந்த பாடல் ‘ஆளப்போறான் தமிழன்’ ஸ்டைலில் அட்டகாசமாக வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் அவர் கம்போஸ் செய்து முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவுவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கின்றனர். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். தற்போது விடுமுறைக்காக சீனா சென்றுள்ள விஜய், இந்தியா திரும்பிய பின்னர், ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *