shadow

‘அல்லாவிற்கு என்ன பதில் சொல்வேன்’. ஃபத்வா அறிவித்த இஸ்லாமிய அமைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
a.r.rahman
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ஈரானிய படமான “முகமது: மெசஞ்சர் ஆஃப் காட்” என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி முஸ்லீம் அமைப்புகளில் ஒன்றான ரஸா அகாடமி, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இந்த படத்தின் இயக்குனர் ஆகியோர்களுக்கு ஃபத்வா அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பின் தலைவர் நூரி , ‘இது போன்ற  படத்தை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை’ என அல்லா என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது? என்று கேள்வி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘எனக்கு இசையறிவு, கல்வி, செல்வம், நல்ல குடும்பம் ஆகியவற்றை கொடுத்தவர் அல்லா. அப்படிப்பட்டவர் இறைதூதரின் படத்திற்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்’ என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சனை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் நீண்ட விளக்கம் ஒன்றையும் அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” ” இந்த படத்துக்கு இசையமைத்ததை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. படத்தை இயக்கியதிலும் தயாரித்ததிலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அந்த பணியில் எனக்கு கிடைத்த ஆன்மீக தொடர்பான ஆத்ம திருப்தியை நான் பகிர விரும்பவில்லை. இது எனது தனிப்பட்ட விஷயம் ””இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் அதே காரணத்திற்காகத்தான். ஒருவேளை அல்லாவை  சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்தை ஒருங்கிணைப்பது, அன்பை பற்றிய போதனைகள், ஏழைகளின் முன்னேற்றம், தர்ம சிந்தனை, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை தவிர்த்து விட்டு மனித இனத்துக்கு சேவை செய்வது போன்ற போதனைகளை உள்ளடக்கிய முகமதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?

நபிகளை பற்றிய போதனைகளை முறையாக புரிந்து கொள்ளாமல், தவறான கருத்துகளை இணையங்களில் காண முடிகிறது. காட்சி ஊடகங்கள் வழியாக சரியான விஷயங்களை கொண்டு புரிய வைக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன்.

மத சுதந்திரம் கொண்டுள்ள இந்திய நாட்டில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இங்கே வன்முறையற்ற அமைதியான வாழ்க்கை வாழ்வதே நோக்கம். நான் இஸ்லாமியத்தின் அறிவார்ந்த சிந்தனைகளை அறிந்துள்ள அறிஞர் அல்ல. பிரச்னைகளை கருணையோடு எதிர்கொள்வாம். கண்ணியத்தோடு கையாள்வோம் வன்முறை வழியாக அல்ல”

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply