shadow

dhanush and sivaகடந்த சில நாட்களாகவே சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 3 படத்தில் தன்னுடன் காமெடி கேரக்டரில் அறிமுகமான சிவகார்த்திகேயன் மிகக்குறைந்த நாட்களில் தன்னைவிட பெரிய ஆளாகிவிட்டதால் தனுஷ் சிவகார்த்திகேயன் மீது பொறாமைபட்டதாகவும், அதனால் இருவருக்குள்ளும் சரியான புரிதல் இல்லை என்றும் செய்திகள் கூறிவந்தன.\

இதை மெய்ப்பிப்பதுபோல் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை’ திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. தனுஷுக்கும் தனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அவர் காக்கி சட்டை படக்குழுவினர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாலும், வேலைப்பளு அதிகரித்ததன் காரணமாகவும் பிரஸ் மீட்டுக்கு வரவில்லை என்று சிவகார்த்திகேயன் கூறினாலும் கோலிவுட்டில் இதை நம்ப யாரும் தயாராக இல்லை.

மேலும் சமீபத்தில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டிருந்த நிலையில் இதே விழாவுக்கு சிவகார்த்திகேயனும் வருகிறார் என்ற அறிவிப்பு செய்ததும் உடனடியாக அங்கிருந்து தனுஷ் கிளம்பினார். தனுஷின் இந்த நடவடிக்கை இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவே அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியது.

Leave a Reply