shadow

பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டு கொலை செய்யப்பட்ட மெக்சிகோ மேயர்

mexicoமெக்ஸிகோ மேயர் பதவிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிசேலா மோட்டா என்ற 33 வயது பெண் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ நாட்டின் மோர்லோஸ் மாகாண கவர்னர் கிராகோ ரமீரஸ் செய்தியாளர்களிடம் கூறியபோது, “டெமிக்ஸ்கோ மேயர் பதவிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிசேலா மோட்டா கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பதவியேற்று ஒருசில மணி நேரத்திற்குள் ஆயுதம் தாங்கிய நபர்களால் அவரது வீட்டிலேயே சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இடதுசாரி அரசியல்வாதியான அவர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராவார்.

படுகொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று கவர்னர் தெரிவித்தார். மெக்ஸிகோவிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெமிக்ஸ்கோ நகரம் போதை மருந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குழுக்கள் நிறைந்த பகுதியாகும். படுகொலை செய்யப்பட்ட மேயர் அதுபோன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சபதமேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply