சுதந்திரதேவி சிலை மீது ஏறிய மர்ம நபர்: அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்கா என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது பிரமாண்டமாக உள்ள சுதந்திரதேவியின் சிலை தான். 151 அடி உயரமுள்ள அந்த சிலை மீது நேற்று மர்ம நபர் ஒருவர் ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திரதேவியின் சிலை மீது நேற்று மனித உருவம் ஒன்று ஏறிச்சென்று உட்கார்ந்து கொண்டிருப்பதாக நியூயார்க் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றா போலீசார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். சிலையின் மேலே உள்ள ஒரு பீடத்தில் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டனர்.

அவரை கீழே இறங்குமாறு கேட்டும் அவர் மறுத்துவிட்டார். 4மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த நபரை போலீசார் பிடித்து கைது செய்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றதாக கூறியதாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *