shadow

indias daughterடெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவின் பாலியல் பலாத்காரம் குறித்த ஆவணப்படத்தை தடையை மீறி ஒளிபரப்பிய பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் ஆறு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆவணப்படம் ஒன்றை எடுத்து வந்த பிபிசி தொலைக்காட்சி சமீபத்தில் குற்றவாளியிடம் பேட்டி எடுத்தது. இந்த பேட்டியில் சர்ச்சைக்குரிய கருத்து இருந்ததால் இந்த பேட்டியை ஒளிபரப்ப அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தை இந்தியா மட்டுமின்று உலகின் எந்த பகுதியில் உள்ள ஊடகமும் ஒளிபரப்புவதற்கு டில்லி மாஜிஸ்திரேட் மூலம், நகரக் காவல் துறை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தடை உத்தரவு பெற்றது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட ஆவணப்படம் பிபிசி தொலைக்காட்சியில் நேற்று முன் தினம் இரவு ஒளிபரப்பானனால், மத்திய அரசு அதிருப்தியடைந்தது.

 இந்நிலையில், ஆவணப்படம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அந்த ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் ஒளிபரப்புவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே, அந்த நிறுவனத்துக்கு புதன்கிழமை மாலை வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசு வழக்குரைஞர் மூலம் திஹார் சிறையின் இயக்குநர் அலோக் குமார் வர்மா அந்த நோட்டீûஸ பிபிசிக்கு அனுப்பினார்.

Leave a Reply