shadow

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு: ஆபத்து இல்லை என கலெக்டர் அறிவிப்பு

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையில் சிறிய அளவில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இதுகுறித்து பொதுமக்கள் எந்தவித கவலையும் கொள்ள வேண்டாம் என்றும் தூத்துகுடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்

நேற்று ஆலையில் சிறிய அளவில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உடனடியாக அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார்.

சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று மாலை முதல்கட்டமாக ஆலையில் ஆய்வு செய்து முடித்தனர்.

இந்த ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையில் லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றும், இருப்பினும் கசிவை நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply