shadow

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாராவின் தந்தை.

vijayஇளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒருவாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக ‘உதிரிப்பூக்கள்’ இயக்குனர் மகேந்திரன் நடிக்கின்றார்.

விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் ரீமேக் என்று கூறப்படும் இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் மெயின் வில்லனாக மகேந்திரன் நடித்தாலும், இன்னும் ஒரு முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிக்க இயக்குனர் அட்லி, சத்யராஜை அணுகியதாகவும், ஆனால் வில்லன் வேடத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சத்யராஜ் ஏற்கனவே அட்லியின் இயக்கத்தில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தாலும், விஜய்யுடன் ஏற்கனவே நண்பன், தலைவா போன்ற படங்களில் பாசிட்டிவ்வாக நடித்துவிட்டு தற்போது வில்லனாக நடிக்க விருப்பமில்லை என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த கேரக்டருக்கு தற்போது அட்லி, வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Leave a Reply